NATIONAL

இலவச வர்த்தகப் பதிவு திட்டத்தின் வழி பயன்பெற பி40 வணிகர்கள் ஊக்குவிப்பு

28 ஆகஸ்ட் 2023, 3:11 AM
இலவச வர்த்தகப் பதிவு திட்டத்தின் வழி பயன்பெற பி40 வணிகர்கள் ஊக்குவிப்பு

கோலாலம்பூர், ஆக 28 - மலேசிய நிறுவன

ஆணையம் (எஸ்.எஸ்.எம்.) மூலம்

அரசாங்கம் வழங்கும் இலவச வர்த்தகப்

பதிவுத் திட்ட வாய்ப்புகளை முழுமையாகப்

பயன்படுத்திக் கொள்ள பி40 வர்த்தகர்கள்

மற்றும் தொழில்முனைவோர்

ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஜனவரி 1

முதல் ஜூலை 31 பதிவு செய்த வரை வணிக

நிறுவனங்களின் எண்ணிக்கை 26,410

ஆகும் என்று இடைக்கால உள்நாட்டு

வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின

அமைச்சர் டத்தோ அம்ரிசான் முகமது அலி

தெரிவித்தார்.

இதற்கிடையில், மீதமுள்ள 60 லட்சம்

வெள்ளி மதிப்புள்ள வணிக பதிவு மானிய

ஒதுக்கீடுகளின் வழி 80,000 க்கும் மேற்பட்ட

தொழில்முனைவோர் பயன் பெற முடியும்

என்று அவர் ஒரு அறிக்கையில்

தெரிவித்தார்.

பி40 தொழில் முனைவோர் மற்றும் முழுநேர

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உயர்கல்வி

நிறுவன மாணவர்கள் தங்கள் வர்த்தகத்தை

1956ஆம் ஆண்டு வர்த்தகப் பதிவுச்

சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான

வாய்ப்பினை வழங்கும் நோக்கில்

மலேசிய நிறுவன ஆணையம் இந்த

திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தவிர, பகாங்கில் 400க்கும் மேற்பட்ட

வணிகர்கள் மற்றும் சிலாங்கூரில் 1,000

வணிகர்கள் பங்கேற்கும்

தொழில்முனைவோர் வழிகாட்டுதல்

நிகழ்ச்சியின் இரண்டு தொடர்களை

எஸ்.எஸ்.எம். இவ்வாண்டு

ஏற்பாடுசெய்துள்ளது என்றும் அவர்

தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.