கிள்ளான், ஆக 21- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு உள்பட பத்து பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தலைமையில் இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷா வில் இன்று பிற்பகல் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டதோடு பதவி நியமனக் கடிதத்திலும் கையெழுத்திட்டனர். இந்த பதவியேற்புச் சடங்கில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்ட உறுப்பினர்கள் வருமாறு-
1. டாக்டர் ஃபாஹ்மி ஙா- ஸ்ரீ செத்தியா (பிகேஆர்)
2. நஜ்வான் ஹலிம் – கோத்தா அங்கிரிக் (பிகேஆர்)
3. பொர்ஹான் அமான் ஷா- தஞ்சோங் சிப்பாட், (பிகேஆர்)
4. இங் ஸீ ஹான்- கின்ராரா (ஜசெக)
5. இங் சுயி லிம்- சிகிஞ்சான் (ஜசெக)
6. ஜமாலியா ஜமாலுடின் – பண்டார் உத்தாமா (ஜசெக)
7. பாப்பாராய்டு வீரமன்- பந்திங் (ஜசெக)
8. இஷாம் ஹஷிம் பாண்டான் இண்டா (அமானா)
9. அன்ஃபால் சாஹ்ரி – தாமான் டெம்ப்ளர் (அமானா)
10. ரிஸாம் இஸ்மாயில்- சுங்கை ஆயர் தாவார் (அம்னோ)
இம்முறை ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் எழுவர் புது முகங்களாவர்.
டாக்டர் ஃபாஹ்மி ஙா, நஜ்வான் ஹலிமி, இங் சுயி லிம், ஜமலாலியா ஜமாலுடின், வீ. பாப்பாராய்டு, அன்ஃபால் சாஹ்ரி மற்றும் ரிஸாம் இஸ்மாயில் ஆகியோரே புதிதாக பதவியேற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் களாவர்.
இவர்களில் சிகிஞ்சான் உறுப்பினரான இங் சுயி லிம் கடந்த தவணையின் போது மாநில சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


