கோலாலம்பூர், ஆக 14 - ஆறு மாநிலங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை முறையாக நிறைவேற்றியதற்காக அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை அரசுக்கு அளிக்கப்படும் ஆதரவை தொடர்ந்து போற்றுவேன் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கிளந்தான், திரங்கானு மற்றும் கெடாவில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. நான் அதை பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவை மறக்க மாட்டேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணியை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கில் வெற்றி பெற்றது. பெரிக்காத்தான் நேஷனல் கிளந்தான், கெடா மற்றும் திரங்கானுவை கைப்பற்றியது.


