EKSKLUSIF

நம்பிக்கை கூட்டணி /தே.முன்னணி  உறவு  தேர்தலுக்கு பின் வலுவாக திகழ்கிறது.

13 ஆகஸ்ட் 2023, 9:59 AM
நம்பிக்கை கூட்டணி /தே.முன்னணி  உறவு  தேர்தலுக்கு பின் வலுவாக திகழ்கிறது.

சுங்கை பூலோ.ஆகஸ்ட்.13-  சிலாங்கூர் மாநில 15 தேர்தலுக்கு பின் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும்  துடிப்புடன் செயல் பட தொடங்கியிள்ளது. இத்தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணி 40 க்கும் மேற் பட்ட தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி  பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் கூறி வந்தார்.

தேர்தல் முடிவுகள் அவரது கூற்றை மெய்பிக்கிறது. தற்போது 34 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி சிலாங்கூர் மாநில ஆட்சியை தற்காத்துக் கொண்டது. ஆயிரத்திக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்துள்ளது. இதன் வழி குறைந்தது 41 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது என்பது என்பது தெளிவாகிறது.

தாமான் மேடான் சட்டமன்ற  தொகுதியில் 30, உலு பெர்னாம் 669,   கோம்பாக் செத்தியாவில் 58, சுங்கை கண்டிஸ் 167, டெங்கில் 407, புக்கிட் மெலாவத்தி 877, ஈஜோக் 917 ஆகிய 7 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறி கொடுத்துள்ளனர்.

இதை தவிர மேலும் 4 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. குறிப்பாக பெர்மாத்தாங், உலு கிள்ளான், சிமினி, பயா ஜராஸ் ஆகிய 4 தொகுதிகள் 2,000 த்திக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்றங்களில் 45 தொகுதிகளில் வெற்றி வாகை சூட வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் மத்திய அரசாங்கத்தில் இணைந்து 8 மாதங்கள் ஆகிறது. அதே வேளையில் மாநில அளவில் கடந்த 2 மாதங்களாக இணைந்து அரசியல் தளத்தில் போராட தொடங்கியுள்ளன.

அதே வேகத்தில் இந்த ஒற்றுமை அரசு தொடர்ந்து ஒற்றுமையாக செயல் படுமேயானால் அடுத்த பொதுத் தேர்தலில்  மத்திய அரசாங்கத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசையும் அதேபோல் மாநில தேர்தலில் மகத்தான வெற்றியை அடையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

இந்த இரண்டு மாத ஒத்துழைப்பு இரண்டு கூட்டணியின் தொண்டர்களிடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது நிகழ்ந்தது.

இந்த முரண் பாடுகள் அனைத்தும் அடுத்த 4 ஆண்டுகளில் கலைந்து ஒற்றுமையாக அடுத்த பொதுத் தேர்தலை எதிர் நோக்க கூட்டணியின் உயர்மட்ட தலைவர் குழு நன்கு திட்டமிட்டு சிறப்பாக செயல்படும்.

இதன் வழி கட்ட ஒற்றுமை அரசு, அரசியல் தளத்தில் மிகவும்  வலுவுடனும் செயல் படும் என்று நாம் அனைவரும் எதிர் பார்ப்போம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.