EL

பாத்தாங் காலி தொகுதியை தற்காக்க  எம்.பி. தீவிர பிரச்சாரம்.

9 ஆகஸ்ட் 2023, 1:29 PM
பாத்தாங் காலி தொகுதியை தற்காக்க  எம்.பி. தீவிர பிரச்சாரம்.

 பு.செந்தோசா.ஆகஸ்ட்.9-  சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தல் இறுதி நேரப் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எல்லாத் தொகுதிகளிலும் இறுதி நேர மாபெரும் பிரச்சாரக் கூட்டங்கள் நடை பெறுகின்றன. நாளை பாத்தாங் காலி சட்ட மன்றத்தில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணியின் பெருந் தலைவர்கள் ஒன்றுகூடி மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தை அத்தொகுதியின் பிரதான தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தின் பின்புறம் நடத்தவுள்ளனர், என்று அத்தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் முகமட் ஈசா பின் அபு காசிம் தெரிவித்தார்.

இந்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, முன்னாள் மந்திரி புசார் தான் ஸ்ரீ முகமது தாயிப், சிலாங்கூர் மாநில அம்னோவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான டத்தோ சைனால் போன்ற முன்னணித் தலைவர்கள் கலந்துக் கொண்டு பரப்புரை செய்கின்றனர். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளரும் பரப்புரை செய்யவிருக்கிறார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் குறைந்தது 3,000 பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இது வரையில் 2 முறை இந்த தொகுதியில் பிரச்சாரத்தில் மந்திரி புசார் ஈடுபட்டுள்ளார். மூன்றாவது முறையாக மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இத்தொகுதியில் இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் என அனைத்து சமூக ஆதரவும் பெருகி வருகிறது. மேலும் இத்தொகுதியில் நான் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

இந்த தொகுதி எனக்கு நன்கு பரிசுத்தமான தொகுதி. வாக்காளர்களை நன்கு அறிவேன். மேலும் முன்னாள் மந்திரி புசார் முகமது தாயிப் அவர்கள் பல முறை வெற்றி பெற்ற தொகுதி. இத்தொகுதி சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணியின் கோட்டையில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை விட இந்த தேர்தலில் கூடுதல் பலத்துடன் களத்தில் இருக்கிறேன். நம்பிக்கை கூட்டணியின் ஆதரவு எனது வெற்றியை மேலும் வலுப் படுத்தியுள்ளது. நம்பிக்கை கூட்டணியில் உள்ள கெ அடிலான், ஜ.செ.க மற்றும் அமானா கட்சிகளின் ஆதரவு சிறப்பாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இத்தொகுதியில் 86,000 வாக்காளர்கள் உள்ளனர். நான் இத்தொகுதியின் மண்ணின் மைந்தன். அந்த வகையில் வாக்காளர்களின் பேராதரவை பெற்று முன்னணி வகிக்கிறேன்.

நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தீவிரமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முகமது ஈசா தெரிவித்தார்.  தேர்தல் நடவடிக்கை அறையில் வேட்பாளர் முகமது ஈசாவிக்கு ஆதரவு தெரிவித்து கூடியிருந்த அரசு சாரா இயக்கத்தினருடன் வேட்பாளர் முகமது ஈசா.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.