செய்தி சு.சுப்பையா
பத்துகேவ்ஸ்.ஆகஸ்ட்.7- சிலாங்கூரை தொடர்ந்து தற்காக்க இரவு பகல் பாராமல் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி சூறாவெளி சுற்றுப்பயணத்தை மேற் கொண்டு வருகிறார். அதே வேளையில் சுங்கைத் துவா சட்ட மன்ற தொகுதியில் மக்கள் எதிர்நோக்கி பிரச்னை பெரும்பான்மையாக தீர்வு கண்டுள்ளேன் என்று மந்திரி புசார் கூறினார்.
கம்போங் கெர்தாஸ் வட்டாரத்தில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது இக்கூட்டத்தில் பெரும்பான்மையாக இளைஞர்கள் திராளாக கலந்துக் கொண்டனர்.
கடந்த மூன்று தவனையாக சுங்கை துவா தொகுதி மக்கள் எதிர் நோக்கிய பிரச்னைகள் முறையாக தீர்வு காணப் பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளப் பேரிடர் பிரச்னை தீர்வு காணப் பட்டுள்ளது. அடுத்து சாலை வசதி முறையாக அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளதி என்று மந்திரி புசார் கூறினார்.
பாஸ் கட்சி இன வாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.
சிலாங்கூர் மாநில வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கையை அப்ப்டியே காப்பியடித்துள்ளார் அஸ்மின் அலி என்று சாடினார்.
பெரிக்காத்தான் கூட்டணிக்கு சிலாங்கூரை ஆட்சி செய்வதற்காண திட்டங்கள் முறையாக இல்லை.
அவரது காலத்தை விட சிலாங்கூரை நாம் மேலும் சிறப்பான திட்டங்கள் வழி மக்களுக்கு நற்சேவையாற்றி வருகிறோம் என்று அவர் கூறினார்.


