EKSKLUSIF

கோலசிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் உள்ளூர் விவசாயின் மகன்.

5 ஆகஸ்ட் 2023, 2:10 PM
கோலசிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் உள்ளூர் விவசாயின் மகன்.

செய்தி- மா. சிவகுமார்

கோல சிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியின் பாக்காத்தான் ஹரப்பான் எண் : 09 பெர்மாத்தாங்  சட்டமன்ற தொகுதியின்  வேட்பாளர் முகமட் யாஹ்யா மட்ஷாரி அவர்களின் ஏற்பாட்டில் சிவப்பு மஞ்சள் ஆரூஸ் சொற்பொழிவு நேற்று இரவு  நடைபெற்றது.

இத்தொகுதியில்  திரளான   ஹராப்பான் ஆதரவாளர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில்  ஆதரவு வர்ண ஆடை அணிந்து பலர்  ஆரவாரத்துடன் இச் சொற்பொழிவில் கலந்து கொள்வது,  தமக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாக  அத்தொகுதியின்  வேட்பாளர்    முகமட் யாஹ்யா மட்ஷாரி  தனது வரவேற்பு உரையில்   மகிழ்ச்சி பொங்க  கூறினார்.

அது மட்டும் இன்றி தான் ஒரு விவசாயி மகன்  என கூறிய அவர். நான் இங்கு உள்ளவன், உங்களுடன் எப்போதும் இங்கு  இருப்பவன். உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே நான் ஒடி வருவேன். .அதனால் உங்களோடு ஓர் உறவாக இருக்கும் எனக்கு நீங்கள் ஆதரவு கொடுங்கள், எனக்கு வாக்களித்து ஒரு விவசாயின் பிரதிநிதியாக  என்னை சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..

தொடர்ந்து,சிலாங்கூர் காபந்து அரசாங்க மந்திரி புசார் டத்தோ அமிருடன் பின் ஷாரி  தனது  உரையில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் யாஹ்யா சாரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.