EKSKLUSIF

17 சிலாங்கூர் பென்யாயாங் திட்டங்கள் (PSP) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன - கோத்தா அங்கேரிக் தொகுதி

27 ஜூலை 2023, 2:49 AM
17 சிலாங்கூர் பென்யாயாங் திட்டங்கள் (PSP) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன - கோத்தா அங்கேரிக் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 27: கடந்த ஆண்டு முதல் தற்போது வரை கோத்தா அங்கேரிக் தொகுதியில் மொத்தம் 17 சிலாங்கூர் பென்யாயாங் திட்டங்கள் (PSP) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன. 

ஜாலான் கொக்மார் 1, தாமான் முத்தியாரா, புக்கிட் ராஜா ஆகிய இடங்களில் பாதுகாப்பு வேலிகள் மற்றும் நடைபாதைகளை சரிசெய்வது மற்றும் செக்‌ஷன் 16 உள்ள கோயிலின் கூரையை சரிசெய்தல் மற்றும் கழிப்பறைகளை மீண்டும் கட்டுவது ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும் என்று அதன் பொறுப்பாளர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

  மேலும், சாலை மேம்பாடு, பள்ளி உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு, பாதுகாப்பு வேலிகள் மற்றும் சில விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும் மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட RM500,000 ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டது

"தங்கள் பகுதியில் உள்ள சில உள்கட்டமைப்புகளை அழகுபடுத்தவும் மேம்படுத்தவும் விரும்பும் குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்கள் மற்றும் கோரிக்கைகளைப் பெற்ற பிறகு இவை அனைத்தும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன.

எதிர்வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த நஜ்வான், தனக்கு இன்னும் வாய்ப்பையும் நம்பிக்கையையும் கொடுத்த கட்சித் தலைமைக்கு நன்றியையும் தெரிவித்தார்.

“இம்முறை தொகுதியில் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டது. இங்குள்ள மக்களின் பிரதிநிதியாக நான் வெற்றி பெற்றால், கோத்தா அங்கேரிக் தொகுதி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முயற்சிப்பேன்.

இந்த மாநிலத்தை ஆளும் வாய்ப்பை பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்காளர்கள் தொடர்ந்து வழங்குவார்கள் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.