ANTARABANGSA

தனியார் ஊழியர் ஒருவர் RM1.2 மில்லியன் இழப்பு - இணையத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு

26 ஜூலை 2023, 9:27 AM
தனியார் ஊழியர் ஒருவர் RM1.2 மில்லியன் இழப்பு - இணையத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு

கூச்சிங், ஜூலை 26: இணையத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக நம்பி தனியார் ஊழியர் ஒருவர் RM1.2 மில்லியன் இழந்துள்ளார்.

மே 14 அன்று, இணையத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறிய பெண்ணை நம்பி ஏமாந்த 30 வயது ஆணிடம் இருந்து காவல்துறைக்கு இந்த சம்பவம் பற்றிய புகார் கிடைத்தது என சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி கூறினார்.

இணையதளம் மூலம் பொருட்களை வெற்றிகரமாக விற்றால் பணம் கமிஷனும் கிடைக்கும் என்றும் பாதிக்கப்பட்டவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

“மே 15 முதல் ஜூலை 13 வரை பாதிக்கப்பட்டவர் ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 27 முறை பணப் பரிவர்த்தனைகளை செய்தார், இதில் RM1.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

"இதுவரை, பாதிக்கப்பட்டவர் RM20,000 மட்டுமே திரும்பப் பெற்றுள்ளார். சந்தேக நபர் வாக்குறுதியளித்த கமிஷன் பணத்தை இன்னும் பெறாத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சமூக வலைதளங்கள் மூலம் நல்ல சம்பளம் வழங்கும் வேலை வாய்ப்பை நம்பி பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்று முகமட் அஸ்மான் அறிவுறுத்தினார்.

 

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.