ACTIVITIES AND ADS

மாநில அரசு 65 பத்து கேவ்ஸ் குடியிருப்பாளர்களின் நில உரிமையை நிறைவு செய்தது

25 ஜூலை 2023, 7:46 AM
மாநில அரசு 65 பத்து கேவ்ஸ் குடியிருப்பாளர்களின் நில உரிமையை நிறைவு செய்தது
மாநில அரசு 65 பத்து கேவ்ஸ் குடியிருப்பாளர்களின் நில உரிமையை நிறைவு செய்தது

கோம்பாக், ஜூலை 25: பத்து கேவ்ஸ் குடியிருப்பாளர்களுக்கான 65 நில உரிமை

விண்ணப்பக் கடிதங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று டத்தோ

மந்திரி புசார் கூறினார்.

கோம்பாக் மாவட்ட நில அலுவலகம், மற்றும் செலாயாங் முனிசிபல் கவுன்சில்

(எம்.பி.எஸ்) இணைந்து மாநில அரசுடன் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக கடந்த

பத்தாண்டுகளாக  நில உரிமை பிரச்சினையில்  நிலவிய சிக்கல் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது என்று  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு  இந்த உதவி, முதலில் கம்போங் இந்தியன்

செட்டில்மென்ட் பகுதியில் 26 விண்ணப்பதாரர்களுக்கு நில உரிமை தீர்க்கப் பட்டதாகவும்,

2009 முதல் மாநில அரசு அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வந்தது.

இறுதியாக இந்தப் பகுதியில் நிலவிய பிரச்சனை தீர்க்கப்பட்டது  விண்ணப்பதாரர்களுக்கு நிலம் உறுதி செய்யப்பட்டது.

"இரண்டாவது குழுவானது பத்து கேவ்ஸ் நகரில் உள்ள 29 விண்ணப்பதாரர்கள் ஆவர்,

வணிகர்களை கொண்ட  அக்குழுவின்   மீள் குடியேற்றத்துக்கு உதவ பட்டுள்ளது."மேலும் 10 பேர் கொண்ட விண்ணப்பதாரர் குழு தாமான்  டாயாவில் உள்ள அசல்

குடியேறிகள், அவர்கள் லாட் 2, பத்து அரங்கின் ஒரு பகுதியில்  மாற்று குடியேற்ற

இடத்தில் குடியமர்த்த படுவர்," என்று அவர் கூறினார்.

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை மற்றும் ஒப்புதல் கடிதங்கள்

வழங்கும் விழாவில் இன்று டேவான் செரோஜா கம்போங் பெண்டஹாராவில்

கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் சிலாங்கூரை ஆள

ஹரப்பான் மற்றும் பி என் கூட்டணிக்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப் பட்டால், கம்போங் இந்தியன் செட்டில்மென்ட் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மாநிலம்  கவனம் செலுத்தும் என்று அமிருதின் தெரிவித்தார்.

"பிஆர்என், 6 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக வேலைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.,

தேர்தலுக்குப் பிறகு இந்த மேம்பாட்டு வசதிகளை வழங்குவதற்கு நிகழ்ச்சி நிரல் மாநில

அரசாங்கத்தின் முன்னுரிமையாகும், இதனால் குடியிருப்பாளர்கள்  சுமுகமாக

தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.