HEALTH

ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கும் நோக்கில் -   கூட்டு சுகாதார  தூய்மை திட்டத்தை செயல்படுத்தியது

25 ஜூலை 2023, 5:32 AM
ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கும் நோக்கில் -   கூட்டு சுகாதார  தூய்மை திட்டத்தை செயல்படுத்தியது

ஷா ஆலம், ஜூலை 25 - கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (MPK) கடந்த ஜூலை 23,

ஞாயிற்றுக்கிழமை அன்று ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கும் நோக்கில்

கூட்டு சுகாதார தூய்மை திட்டதை செயல் படுத்தியது. மேலும் இந்த திட்டத்தில் பங்கெடுக்க  பங்சாபுரி பண்டாமாரின் குடியிருப்பாளர்கள் கூட்டு நிர்வாக அமைப்பு மற்றும் ருக்குன் தெத்தாங்கா  உறுப்பினர்களுடன் ஒத்துழைத்தது.

இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு

பணிகளை மேற் கொள்வதுடன், டெங்கி பாதிப்புகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு

ஏற்படுத்தவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

"டெங்கி காய்ச்சல் பற்றிய விளக்கங்கள், கண்காணிப்பு, கண்காட்சிகள் மற்றும்

பலவற்றை உள்ளடக்கிய இத்திட்டம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த

பல்வேறு  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று MPK கூறியது..

MPK கவுன்சில் உறுப்பினர் ஜி. பன்னீர் செல்வம் மற்றும் சுகாதார இயக்குநர் அஸ்மி

முஜி உட்பட மேலும் 120க்கும் மேற்பட்டோர் கூட்டு சுகாதார திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்,  டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி அவர்கள், சுகாதார

அமைச்சகத்தில்  பேசுகையில் சுற்றுப்புறத்தை  சுத்தப்படுத்தல் '' ஒரு மணி நேர முயற்சி''

போன்ற  சமூக  கூட்டு சுகாதார திட்ட நடவடிக்கைகளில்   குடியிருப்பாளர்கள்  தீவிரமாக

ஈடுபடுத்துவதன் மூலம் டெங்கி  நோயை குறைக்க  முடியும் என்று கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.