ACTIVITIES AND ADS

கோலசிலாங்கூர் கம்போங் குவாந்தன்  கோல்ஃப் கிளப் சாலை  இந்து மயான துப்புரவு பணி

18 ஜூலை 2023, 4:41 AM
கோலசிலாங்கூர் கம்போங் குவாந்தன்  கோல்ஃப் கிளப் சாலை  இந்து மயான துப்புரவு பணி
கோலசிலாங்கூர் கம்போங் குவாந்தன்  கோல்ஃப் கிளப் சாலை  இந்து மயான துப்புரவு பணி

கோலசிலாங்கூர் ஜூலை 17 ;_ நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலசிலாங்கூர் கம்போங் குவாந்தன்  கோல்ஃப் கிளப் சாலை  இந்து மயான மேம்பாட்டு பணிக்கு   புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற  தொகுதி  இந்திய சமூக தலைவர் கலைக்குமார் ஆறுமுகம்  ஏற்பாட்டில் , கோல சிலாங்கூர் நாடாளுமன்ற  உறுப்பினர்  மாண்புமிகு  டத்தோ டாக்டர் சூல்கிப்லி அமாட், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புவான் ஜுவாரியா ,  சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்  உதவியுடன்   துப்புரவு பணி  மேற்கொள்ளப்பட்டது.

இந்த   இடுகாடு துப்புரவு பணிக்கு புல் வெட்டும் இயந்திரம்  மற்றும்  களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பம்புகளை  நன்கொடையாக வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு  டத்தோ டாக்டர் சூல்கிப்லி அமாட்டுக்கு   ஏற்பாட்டுக் குழுவினர் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அத்திட்டத்திற்கு  தங்கள் நேரத்தை  ஒதுக்கி  சிறந்த முறையில் திட்டம் நிறைவேற உதவிய அனைவருக்கும் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தொகுதியின்  முன்னாள் உறுப்பினர் ஒய்.பி.ஜுவைரியா பிந்தி சுல்கிஃப்லிக்கும், தனது குழுவின் நன்றியை தெரிவித்துக் கொண்டார் ஏற்பாட்டு குழு தலைவர் கலைக்குமார் ஆறுமுகம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.