NATIONAL

தேசிய  பூப்பந்து போட்டியில் லெட்ஷானா முதல் தேசிய பட்டத்தை வென்றனர்

9 ஜூலை 2023, 2:04 PM
தேசிய  பூப்பந்து போட்டியில் லெட்ஷானா முதல் தேசிய பட்டத்தை வென்றனர்

ஜூலை 9, 2023 அன்று புக்கிட் கியாராவில் உள்ள ஸ்டேடியம் ஜுவாராவில் நடந்த தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றில், சக வீராங்கனையான வோங் லிங் சிங்குக்கு எதிரான போட்டியின் போது, தேசிய பேட்மிண்டன்  மகளிர் ஒற்றையர் வீராங்கனை கே. லெட்ஷானா. பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், BAM பிரதிநிதித்து 66 நிமிடங்களே நீடித்த கடுமையான போட்டியில் சக வீராங்கனை Wong Ling Ching ஐ 16 - 21, 21 - 17, 21 - 19 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து வளர்ந்து வரும் சாம்பியன்  என்று நம்பிக்கையையும்  எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப  வென்றார்.

முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றது , லெட்சனாவின் முதல் பட்டமாகும்.

"நிச்சயமாக தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இது தேசிய அளவில் மிகப் பெரிய போட்டியாகும், நான் சாம்பியனாவதை இலக்காகக் கொண்டேன், எனக்கு அந்த பட்டம் கிடைத்தது, எனவே இந்த பட்டத்துடன் முன்னேறி வெளிநாட்டு போட்டிகளில் மேலும் முன்னேறுவேன்" என்றார்.  உலக தரவரிசையில் 68 வது வீரராக இருக்கும் இவர்.

ஜூலை 18 முதல் ஜூலை 23 வரையிலான கொரிய ஓப்பனில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள தயாராகி வருவதற்கு இந்த வெற்றி கூடுதல் உந்துதலாக இருந்ததாக லெட்ஷானா கூறினார்.

"சர்வதேச போட்டிகளில் எனக்கு  அனுபவங்கள் குறைவு, எனவே இந்த சாம்பியன்ஷிப் கொரியா ஓப்பனில் சிறப்பாக செயல்பட எனக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. எனவே எனது பலவீனங்களை பின்னர் சரி செய்து, கொரியா ஓப்பனில் எனது ஆட்டம் எவ்வாறு தொடர்கிறது என்பதைப் பார்க்க  வேண்டும் என்று நினைக்கிறேன், ”என்று அவர் கூறினார்.

லெட்ஷானா RM7,000 மற்றும் கோப்பையை வென்றார், அதே நேரத்தில் வோங் RM3,500 வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.