EKSKLUSIF

ஜாவியில் பேசி  தொண்டர்களை  உற்சாகப்படுத்தினார் முன்னாள் சபாநாயகர்  எங் சுவி லிங் .

25 ஜூன் 2023, 3:16 PM
ஜாவியில்  பேசி  தொண்டர்களை  உற்சாகப்படுத்தினார் முன்னாள் சபாநாயகர்   எங் சுவி லிங் .

செய்திகள் - சு. சுப்பையா

ஷா ஆலாம் - ஜூன்.25-  சிவப்பு மஞ்சள் தேர்தல் இயந்திரப் பேரணியில் பிரச்சார உரையாற்றிய போது  ஜாவா மொழியில் பேசித்  தொண்டர்களுக்கு  உற்சாகம் மூட்டினார் முன்னாள் செகிஞ்சன் மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகருமான எங் சுவி லிம் .

நேற்று சா ஆலாம், மெர்டேக்கா சதுக்கத்தில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயந்திரம் வெள்ளோட்டம் கண்டது.  அதில் உரையாற்றிய ஜ.செ.க.வின் சட்டமன்ற உறுப்பினராகக் கடந்த 3 தவணையாக சேவையாற்றி வரும்  எங் சுய் லிம் சிலாங்கூர் மாநில வட பகுதியில் பெரும் செல்வாக்கு பெற்றவர்.

மலாய்க்காரர்களில் ஜாவா உட் பிரிவைச் சேர்ந்தவர்கள் சபா பெர்ணம் முதல் சிப்பாங் வரையில் உள்ள கடலோரப் பகுதியில் கணிசமான அளவில்  வாழ்கிறார்கள். இவர்கள் இன்னும் தங்களது தாய் மொழியான ஜாவியில்  பேசி உறவாடி வருகின்றன.

எங் சுய் லிம் ஜாவா மொழியில் பேசத் தொங்கிய உடன் வந்திருந்த ஜாவா இனத்தவர்கள் உற்சாகத்தில் குதுகளித்தனர்.  பெரிக்காத்தான் நேசியோனல் சிலாங்கூரில் இன அரசியலை நடத்த முடியாது. சிலாங்கூர் மக்கள் முதிர்ச்சி பெற்றவர்கள் என்று கூறி பெரிக்காத்தானை சாடி,   வாக்காளர்களை பாராட்டினார்.

அஸ்மின் அலியின் துரோக அரசியலையும் அவர் வன்மையாக சாடினார். ஐய்யாயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் இயந்திரம் , சிலாங்கூரை நம்பிக்கை கூட்டணி மீண்டும் அசுரப் பலத்துடன் கைப்பற்றும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை என்பதை உறுதி படுத்தினார் திரு. எங்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.