ஷா ஆலம், ஜூன் 11: மோட்டார் சைக்கிள்களில் உணவு அல்லது பொருட்களை விநியோகிக்கும் பட்டு வாடா தொழிலை மேற்கொண்டு வரும் ரோடா டாருல் ஏசான் Roda Darul Ehsan (RiDE) ரைட் முன் முயற்சியாக வெள்ளி 500 யை ஊழியர்களின் சேமநிதி வைப்பு தொகை நிதிக்கு (EPF) வழங்கியது.
ஷா ஆலமிலுள்ள டத்தாரான் கார்னிவல் ஸ்டேடியத்தில் ஜூன் 10, 2023 அன்று சிலாங்கூர் இளைஞர் விழா 2023 உடன் இணைந்து ரோடா டாருல் எஹ்சான் முன்முயற்சியின் (RiDE) நிதி ஒப்படைப்பு விழாவிற்கு டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் இளம் தலைமுறை மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் கைருதீன் ஒத்மான் மற்றும் மாநில விளையாட்டு கவுன்சிலின் (MSN) நிர்வாக இயக்குனர் முகமது நிஜாம் மர்ஜுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணகான இளைஞர்களில் ஒருவரான, ஒரு உயர்கல்விக்கூட மாணவர் முகமட் ஜாஃப்ரி முகமட் ஃபைருஸாகி, 21, இந்த சன்மானம் சிலாங்கூரில் உணவு விநியோகம் சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு என்று விவரித்தார்.
"எங்கள் சுமையை குறைக்க தயாராக இருக்கும் மாநில அரசுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், என ஷா ஆலம் சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா பாலிடெக்னிக்கில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ கல்வி மாணவர் கூறுகையில், "நான் எனது படிப்பு செலவை ஈடுகட்ட உணவு விநியோக சேவையை பகுதி நேரமாக செய்கிறேன் என சிலாங்கூர்கினியிடம் கூறினார்
இதற்கிடையில், 30 வயதான Farah Azali, குடும்பத்தின் பொருளாதாரச் செலவுகளை ஈடு செய்ய RiDE மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாக கூறினார். அவர் தனது கணவருக்கு உதவுவதற்காக பகுதி நேர ஆன்-கால் தொழிலாளியாக இத்தொழிலை தேர்வு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது பகுதி நேர வேலைதான் என்றாலும், குடும்பச் சுமையை குறைக்கலாம்” என்கிறார்.
இரண்டு குழந்தைகளின் தாயான அவர், மாநில அரசு எங்களுக்கு உதவ தயாராக இருப்பதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சிலாங்கூர் ஊடகத்திடம் தெரிவித்துக் கொண்டார்.நேற்று இங்குள்ள ஷா ஆலம் ஸ்டேடியம் கார்னிவல் சதுக்கத்தில் சிலாங்கூர் இளைஞர் விழாவுடன் இணைந்து நடந்த ரைட் நிதி ஒப்படைப்பு விழாவில் கலந்து கொண்ட 3,000 ஆன்-கால் தொழிலாளர்களில் அவரும் அடங்குவர்.


