ECONOMY

ரவாங் தொகுதி ஏற்பாட்டில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் விநியோகம்

5 ஜூன் 2023, 7:17 AM
ரவாங் தொகுதி ஏற்பாட்டில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 5- வசதி குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்

நோக்கில் 12,000 வெள்ளி செலவில் 50 சக்கர நாற்காலிகளை ரவாங்

சட்டமன்றத் தொகுதி விநியோகம் செய்தது.

தொகுதி மக்களிடம் இருந்து கிடைத்த விண்ணப்பங்களின் அடிப்படையில்

இந்த சக்கர நாற்காலிகள் விநியோகிக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர்

சுவா வேய் கியாட் கூறினார்.

உண்மையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சக்கர நாற்காலிகள்

விநியோகம் செய்யப்பட்டது. வசதி குறைந்த தரப்பினரின் சுமையைக்

குறைக்கும் அதே வேளையில் சக்கர நாற்காலியின் வாயிலாக அவர்கள்

சுயமாக நடமாடுவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கிலும் இந்த

உதவி வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

சக்கர நாற்காலி மற்றும் இதர உதவிகள் தேவைப்படுவோர் அடையாளக்

கார்டு, மருத்துவமனை கடிதம் உள்ளிட்ட ஆவணங்களுடன் ரவாங்

தொகுதி மக்கள் சேவை மையத்துக்கு நேரில் வருமாறு அவர் கேட்டுக்

கொண்டார்.

இத்தகைய உதவிகள் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-60912118 எண்

எண்களில் தொகுதி மக்கள் மையத்தை அல்லது சுவா வேய் கியாட் எனும்

பேஸ்புக் பக்கத்தை அணுகலாம் என அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.