ANTARABANGSA

போதைப் பொருள் கடத்தல், அந்நியப் பிரஜைகளின் ஊடுருவலைத் தடுப்பதில் தாய்லாந்து போலீஸ் ஒத்துழைப்பு

23 மே 2023, 4:57 AM
போதைப் பொருள் கடத்தல், அந்நியப் பிரஜைகளின் ஊடுருவலைத் தடுப்பதில் தாய்லாந்து போலீஸ் ஒத்துழைப்பு

தும்பாட், மே 23- போதைப் பொருள் மற்றும் பொருள் கட்டத்தல், அந்நிய

நாட்டினர் ஊடுருவல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைளை

முறியடிப்பதில் தாய்லாந்து போலீசாருடன் கிளந்தான் மாநிலப் போலீசார்

தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வருவர்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் தாய்லாந்து போலீசாருடன் அடிக்கடி

தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்படி நாட்டின்

எல்லையில் உள்ள மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கு

உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கிளந்தான் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ

முகமது ஜூக்கி ஹருண் கூறினார்.

உதாரணத்திற்கு தானா மேரா மாவட்ட போலீஸ் தலைவர் தாய்லாந்தின்

வாயேங் மாவட்ட போலீஸ் தலைவருடனும் பாசீர் மாஸ் மாவட்ட

போலீஸ் தலைவர் கோலோக் மாவட்ட போலீஸ் தலைவருடனும்

தும்பாட் மாவட்ட போலீஸ் தலைவர் தக்பாய் மாவட்டப் போலீஸ்

தலைவருடனும் ஜெலி மாவட்ட போலீஸ் தலைவர் புக்கேத்தா மாவட்ட

போலீஸ் தலைவருடனும் தொடர்பில் இருந்து வரவேண்டும் என அவர்

குறிப்பிட்டார்.

தாய்லாந்து போலீசாருடனான சந்திப்புகளை அதிகப்படுத்தியதன் மூலம்

அமலாக்க நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு கைது நடவடிக்கைகளின்

எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளின் காவல் துறையினரும் வகுத்துள்ள வியூகத் திட்டங்களின்

வாயிலாக நாட்டிற்குள் போதைப் பொருளைக் கொண்டு வர கடத்தல்

கும்பல்கள் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன என்று அவர்

மேலும் சொன்னார்.

தும்பாட் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு

நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.