NATIONAL

தாய்மார்களை அன்புடன் கவனித்துக் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்

15 மே 2023, 2:56 AM
தாய்மார்களை அன்புடன் கவனித்துக் கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்

கோலாலம்பூர், மே 15: அன்னையர் தினத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், “தாய்மார்களை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று மக்களிடம் கூறினார்..

டேவான் மெர்டேகாவில் நடந்த ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாட்டில் பிரதமர் தனது செய்தியை வழங்கியபோது, அன்னையர்களின் தியாகங்களையும் சேவைகளையும் எப்போதும் பாராட்டுமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

"அன்னையர்கள், பங்களிப்பு, பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் புகார் செய்வதற்கான இடமாக இருக்கின்றனர். மேலும், அவர்களின் அன்பை மாற்றுவது கடினமான ஒன்றாகும்.

பிரதமர் சிறையில் தண்டனை அனுபவித்த போது அவரது தாயார் இறந்த கதையைப் பகிர்ந்து கொண்டார்.

"நான் சிறையில் இருந்தபோது என் அம்மா இறப்பிற்கு மட்டும்தான் அழுதேன்," என்று அவர் கூறினார்.

மலேசியாவில் அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 14 அன்று கொண்டாடப்படுகிறது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.