ANTARABANGSA

இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- உடனே விடுவிக்கவும் உத்தரவு

12 மே 2023, 8:30 AM
இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு- உடனே விடுவிக்கவும் உத்தரவு

புதுடில்லி, மே 12- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் துணை இராணுவப் படையினரால்

நேற்று கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது எனக்கூறிய அந்நாட்டின்

உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.

மூவர் அடங்கிய நீதிபதி குழுவுக்கு தலைமையேற்ற தலைமை நீதிபதி

உமர் அத்தா பண்டியால் இம்ரான் கானை உடனடியாக நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அந்த முன்னாள் பிரதமரை கைது செய்த முறை சிறிதும் ஏற்றுக் கொள்ள

முடியாதது என்று நீதிபதி ஆதார் மினல்லா கூறியதாக உள்நாட்டு

ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் பலவந்தமான முறையில் கைது செய்யப்பட்டதோடு

தடுப்புக் காவலின் போது அவர் கடுமையாக நடத்தப்பட்டதாக அவரின்

வழக்கறிஞர்கள் கூறினர்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் எனக் குற்றஞ்சாட்டி வரும் அவரின் ஆதரவாளர்கள்

தொடர்ந்து வன்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.