EKSKLUSIF

கோத்தா டாமன் சாரா பலநோக்கு மண்டபத்தில் சுபாங்  தொகுதியின்  ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது

7 மே 2023, 10:48 AM
கோத்தா டாமன் சாரா பலநோக்கு மண்டபத்தில்  சுபாங்  தொகுதியின்  ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது

சுபாங் , மே 7 ; இன்று  மே 7ம் தேதி பிற்பகலில்  கோத்தா டாமன் சாரா பலநோக்கு மண்டபத்தில்  சுபாங் நாடாளுமன்ற  உறுப்பினரும்  மித்ரா தலைவருமான  டத்தோ ஆர்.ரமணனின் ஏற்பாட்டில் சுபாங்  தொகுதியின்  ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது.

இதில்  எல்லா இனங்களையும்  சேர்ந்த 1200 விருந்தினர்கள்  கலந்து கொண்டதுடன் அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினரும், கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான ஆர். சிவராசாவும் கலந்து  கொண்டார்.

இதில் விருந்தினர்களை வரவேற்று பேசிய நாடாளுமன்ற  உறுப்பினர் மக்களுக்குச்  சேவை வழங்கத் தான் எப்போதும்  தயார் என்றும் தன்னை எண். C G 46, ஸ்டார் அவின்யூ  பிஸ்னஸ் மையம் , ஜாலான்  சூஹால் U 5/178  செக்சன் u5 ஷா ஆலம் என்ற முகவரியில் சந்திக்கலாம் என்றார்.

இருப்பினும், தனக்கு வழங்கப் பட்டுள்ள மித்ரா பொறுப்புகளை கவனிக்க  வெளியே  செல்லும் வேளைகளிலும் மக்களுக்குச் சேவையாற்ற 4 பணியாளர்களைத் தன் அலுவலகத்தில் அமர்த்தி உள்ளதாகவும், மக்கள்  தங்கள்  பிரச்சனைகளுக்கு  அவர்களைத் தயங்காமல் நாடலாம், மேலும்  ஏதேனும்  தகவல்களை  அனுப்பவும் உதவியாக  014 963 7107 என்ற  வாட்ஸ்ஆபின்  தொடர்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

செய்தி. சு. சுப்பையா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.