ஷா ஆலம், ஏப் 24- வரும் ஜூலை மாதம் 22 மற்றும் ஆகஸ்டு 26 ஆம் தேதிகளில் காக்கை சுடும் இயக்கத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் நடத்தவிருக்கிறது.
தகுதி உள்ள நபர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்யலாம் என்று மாநகர் மன்றம் கூறியது.
இந்த காக்கை சுடும் இயக்கத்தில் 30 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான பாரங்களைப் பூர்த்தி செய்து இம்மாதம் 28 ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் மாநகர் மன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அடையாளக் கார்டு நகல், புதிய துப்பாக்கிச் சுடும் லைசென்ஸ் புத்தகம், வங்கி புத்தக மற்றும் வங்கி கணக்கறிக்கை நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், விண்ணப்பங்கள் sititastura@mbpj.gov.my அல்லது selvarethnam@mbpj.gov.my அல்லது மாநகர் மன்றத்தின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் துறையின் கீழ் உள்ள Kacauganggu பிரிவு செயலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.


