ALAM SEKITAR & CUACA

பெட்டாலிங் ஜெயாவில் காற்றின் தரம் சீரடைந்தது- சிலாங்கூர் முழுவதும் தரக்குறியீடு மிதமான அளவில் பதிவு 

23 ஏப்ரல் 2023, 11:12 AM
பெட்டாலிங் ஜெயாவில் காற்றின் தரம் சீரடைந்தது- சிலாங்கூர் முழுவதும் தரக்குறியீடு மிதமான அளவில் பதிவு 

ஷா ஆலம், ஏப் 23- பெட்டாலிங் ஜெயாவில் இன்று காலை காற்றின் தரக் குறியீடு (ஐ.பி.யு.) மிதமான நிலைக்குத் திரும்பியது. இன்று காலை 9.00 மணிக்கு அந்த வட்டாரத்தில் காற்றின் தரம் 69 ஐ.பி.யு.வாக பதிவானது.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் காற்றின் தரம் 69 முதல் 100 வரை அதாவது மிதமான அளவில் பதிவானதாக சுற்றுச்சூழல் இலாகாவின் மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அகப்பக்கம் கூறியது.

தீபகற்ப மலேசியாவில் பெங்கேராங் (ஐ.பி.யு.29), கோத்தா திங்கி (38), கூலிம் (45), தைப்பிங் (41) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் சிறப்பானதாக இருந்தது.

ஐ.பி.யு. அளவில் 0 முதல் 50 என்பது காற்றின் தரம் சிறப்பானதாகவும் 51 முதல் 100 வரை மிதமானதாகவும் 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றதாகவும் 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் 300க்கும் மேல் ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் நேற்று காற்றின் தரக்குறியீடு 115ஆக அதாவது ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருந்தது.

பருவநிலை மாற்றம் காரணமாக வரும் ஆகஸ்டு மாதம் வரை மலேசியா நீடித்த வெப்ப நிலையை எதிர்கொள்ளும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது அண்மையில் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.