ANTARABANGSA

அர்ஜென்டினாவில் மே 20 அன்று ஃபிஃபா (FIFA) B 20 உலகக் கிண்ண கால்பந்து போட்டி  தொடங்கும்

18 ஏப்ரல் 2023, 6:31 AM
அர்ஜென்டினாவில் மே 20 அன்று ஃபிஃபா (FIFA) B 20 உலகக் கிண்ண கால்பந்து போட்டி  தொடங்கும்

ஜெனீவா, ஏப்ரல் 18: இந்தோனேசியாவிற்குப் பதிலாக 2023 ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்ட (B-20) உலகக் கிண்ண கால்பந்து போட்டியை அர்ஜென்டினா நடத்தும் என்று திங்களன்று உலக கால்பந்து நிர்வாகக் குழுவை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்துள்ளது.

FIFA U-20 உலகக் கிண்ண கால்பந்து போட்டி மே 20 முதல் ஜூன் 11 வரை நடைபெறும். அர்ஜென்டினா ஒருமுறை இதே போட்டியை 2001ல் நடத்தியது.

FIFA U20 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகான அதிகாரப்பூர்வ தொடக்கம் ஏப்ரல் 21 அன்று சூரிச்சில் உள்ள FIFA தலைமையகத்தில் நடைபெறும்.

இந்தோனேசியாவில் நடைபெறவிருந்த B20 போட்டியில் இஸ்ரேல் அணி பங்கேற்பதற்கு, நாட்டில் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தோனேசியா இழந்தது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.