ECONOMY

மற்றொரு மனிதவள அமைச்சரின் மூத்த அதிகாரி எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டார்

15 ஏப்ரல் 2023, 3:45 AM
மற்றொரு மனிதவள அமைச்சரின் மூத்த அதிகாரி எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டார்

புத்ராஜெயா, ஏப்ரல் 15 - மனித வளத்துறை அமைச்சர் வி.சிவகுமாரின் மற்றொரு மூத்த அதிகாரி நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப் பட்டார்.

அந் நபர்  திங்கட்கிழமை (ஏப்ரல் 17) வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கியை இன்று தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

நேற்று காலை மனிதவள அமைச்சகத்தின் வெளிநாட்டு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பாக எம்ஏசிசி நடத்திய சோதனையில் சிவகுமாரின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

அதிகாரி கைது செய்யப்பட்டதை அறிந்த சிவக்குமார், தேவைப்பட்டால் தானும் மனிதவள அமைச்சகமும் எம்ஏசிசிக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்று கூறியதாக கூறப் படுகிறது.

- பெர்னாமா

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.