கோலாலம்பூர், ஏப் 10 - இந்தோனேசியாவின் பாலி நகருக்கு தெற்கே இன்று காலை 8.37 மணியளவில் ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் உலுக்கியது.இந்தோனேசியாவின் டென்பசார் நகருக்கு தென்கிழக்கே 61 கிலோமீட்டர் தொலைவிலும் 750 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.
இருப்பினும், இந்த நில நடுக்கம் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.
ANTARABANGSA
இந்தோனேசியாவின் பாலியில் மிதமான நிலநடுக்கம்
10 ஏப்ரல் 2023, 3:53 AM


