ECONOMY

பட்டாசு வெடித்து இருவரை காயப்படுத்தியவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

9 ஏப்ரல் 2023, 5:25 AM
பட்டாசு வெடித்து இருவரை காயப்படுத்தியவர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், ஏப் 9- இருவருக்கு காயம் காயம் ஏற்படும் அளவுக்கு ஆபத்தான முறையில் பட்டாசை வைத்து விளையாடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோம்பாக், கம்போங் சங்காட்டில் கடந்த மாதம் 31ஆம் தேதி நிகழ்ந்த து.

கும்பல் ஒன்று வீடொன்றை நோக்கி பட்டாசை ஏவி விளையாடுவதை சித்தரிக்கும் காணொளி ஒன்று தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் நோர் அரிபின் முகமது கூறினார்.

கடந்த மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணியளவில் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞரும் 24 வயது பெண்ணும் தொடை மற்றும் காதில் காயங்களுக்குள்ளானதாகக் அவர் சொன்னார்.

குற்றவியல் சட்டத்தின் 435/324 பிரிவுகளின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில் இதன் தொடர்பில் சந்தேகப் பேர்வழி களை தாங்கள் தொடர்ந்து தேடி வருவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவலறிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நுர் அத்திகாவை 018-3648044 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.