MEDIA STATEMENT

பிரதமர் RM200 இ-வாலட் உதவி அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது

8 ஏப்ரல் 2023, 4:27 AM
பிரதமர் RM200 இ-வாலட் உதவி அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது

ஷா ஆலாம், ஏப்ரல் 7: நாட்டிலுள்ள அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் 2023 இ-வாலட் உதவியை அரசாங்கம் நீட்டிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அந்த உதவியை சம்பந்தப்பட்ட குழுவினர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

"இ-வாலட்டை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தலாம்," என்று அவர் இன்று  மலேசிய பல்கலைக்கழக டெக்னாலஜி மாரா (UiTM) மாணவர் பிரதிநிதி கவுன்சில் உடனான பிரதமரின் உரையாடல் அமர்வில் சுருக்கமாக கூறினார்.

2023 பட்ஜெட்டில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கு என ரிம 200 இ-வாலட் உதவியைப் பெறுபவர்கள் என  வகை படுத்தப்பட்டது  குறித்து,  மாணவர் பிரதிநிதி ஒருவர்   கேள்வி  எழுப்பினார், இதன் விளைவாக சில மாணவர்கள் பலனடைய வில்லை மற்றும் உதவிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்   7 ஏப்ரல் அன்று UiTM க்கு விஜயம் செய்ததை ஒட்டி நடந்த உரையாடல் அமர்வுக்கு பின், நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின், தொலை தொடர்பு மேம்பாடு உட்பட  நாடு முழுவதும் உள்ள அனைத்து  பல்கலைக்கழக  வளாகங்களில் உள்ள மாணவர்கள்  இத்திட்டத்தின் வழி பயனடைவதை உறுதி செய்ய சில உடனடி திட்டங்களை செயல் படுத்துவார் என்றும் உறுதியளித்தார்.

"ஒற்றுமை அரசாங்கத்திற்கான எங்கள் தற்போதைய அறிவுறுத்தல்கள், நாடு முழுவதும் அணுகல் (இன்டர்நெட்) விரிவானதாக இருப்பதை உறுதி செய்வதே முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் அதிக விலை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக்குடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித்தார்.

"ஆனால் இது மானியம் தவிர அரசாங்கத்தின் (விமான டிக்கெட் விலை) எல்லைக்கு அப்பாற்பட்டது.  நாம் விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். (ஒருவேளை) இது வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கப்படலாம். இதனை பிறகு  மேலும்  விவாதிப்போம்," என்றார் பிரதமர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.