ACTIVITIES AND ADS

தீயினால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு உடனடி உதவிகள், உணவு கூடை

7 ஏப்ரல் 2023, 2:24 AM
தீயினால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு உடனடி உதவிகள், உணவு கூடை

ஷா ஆலம், ஏப்ரல் 7:  தெலுக் பங்லிமா கராங்கில், 10, கெபுன் பாருவில் உள்ள ஆறு பேர் அடங்கிய ஒரு குடும்பம், தீயினால் வீட்டை இழந்தது.  தங்கள் வீடு தீயில் எரிந்ததால் தங்குமிடத்தை இழந்த அவர்கள், சிலாங்கூர் ஜகாட் வாரியத்தின் (LZS) உதவியைப் பெற்றனர்..

அவசர உதவி மற்றும் உணவுகளை பொருட்களை கையளித்து சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு  உதவி  அளித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

"தற்போது, ​​பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள தனது உடன்பிறந்தவர்களின் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியுள்ளார்" என்று முகநூல் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து முழுமையான ஆவணங்களையும் பெற்றவுடன் குடும்பத்திற்கு மேலும் உதவி வழங்கப்படும் என LZS தெரிவித்துள்ளது.

"இந்த ரமலான் மாதத்தில் இந்த சோதனையை எதிர்கொள்ளும் வலிமையை இந்த குடும்பத்திற்கு வழங்க நாங்கள் ஒன்றாக பிரார்த்தனை செய்கிறோம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.