ALAM SEKITAR & CUACA

பொது இடத்தில் குப்பைகளை வீசிய சலவை நிலைய உரிமையாளருக்கு எம்.பி.ஏ.ஜே. அபராதம்

24 மார்ச் 2023, 3:14 AM
பொது இடத்தில் குப்பைகளை வீசிய சலவை நிலைய உரிமையாளருக்கு எம்.பி.ஏ.ஜே. அபராதம்

ஷா ஆலம், மார்ச் 24- குப்பைகள் அடங்கிய பிளாஸ்டிக் கலங்களை பொது இடத்தில் வீசியதற்கு காரணமாக இருந்த சலவை நிலையத்திற்கு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் இம்மாதம் 6ஆம் தேதி குற்றப்பதிவை வெளியிட்டது.

அம்பாங் ஜெயா, தாமான் மூடா, ஜாலான் மாவார் 4இல் சாலையோரமாக குப்பைகள் வீச பட்டதற்கு அந்த சலவை நிலையத்தின் உரிமையாளர் அல்லது ஊழியர் காரணமாக இருக்கக்கூடும் என்பது சோதனையில் தெரிய வந்ததாக நகராண்மைக் கழகத்தின் பொது உறவு செயலகம் கூறியது.

இதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக குப்பை சேகரித்தல் மற்றும் அழித்தல் துணைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் இந்த நிலையத்திற்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது என அது  அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இம்மாதம் 16ஆம் தேதி வரை இத்தகைய குற்றங்களுக்காக 17 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகத்தின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் குற்றப் பதிவுகளுக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறிய வர்களுக்கு 11 எச்சரிக்கை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது என்றும்  அது குறிப்பிட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.