ALAM SEKITAR & CUACA

ஹராப்பான் மூன்று மாநிலங்களை தக்கவைத்து கெடாவை கைப்பற்ற கவனம் செலுத்தும்.

19 மார்ச் 2023, 4:25 AM
ஹராப்பான் மூன்று மாநிலங்களை தக்கவைத்து கெடாவை கைப்பற்ற கவனம் செலுத்தும்.
ஹராப்பான் மூன்று மாநிலங்களை தக்கவைத்து கெடாவை கைப்பற்ற கவனம் செலுத்தும்.

ஷா ஆலம், மார்ச் 18 - தற்போது பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆளும் மாநிலங்களை  கைப்பற்றும் விதமாக, வரவிருக்கும் மாநிலத் தேர்தலில்  பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கெடாவில் கவனம் செலுத்தும் என உள்துறை அமைச்சரும்  நம்பிக்கை கூட்டணியின் செயலாளருமான கெஅடிலான் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறுகையில், ஹராப்பான் மாநில தேர்தல்களில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களில் தனது அரசாங்கங்களை  தற்காத்துக் கொள்ளும் என்றார்.

"நாங்கள் கவனம் செலுத்தும் நான்கு மாநிலங்களில், கெடாவை பாதுகாப்பதில் PN மும்முரமாக இருப்பதால், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகியவற்றில் கவனம் குறைவாக இருப்பதால், கெடாவில் கவனம் செலுத்துவதே சிறந்த அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன். எனவே, நாம் கெடாவில் கவனம் செலுத்த வேண்டும்.

“எங்கள்  தலைவர் (டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) கெடா மந்திரி புசாருக்கு எதிராக  களமிறங்க தேவையில்லை  என்று நான் நினைக்கிறேன். அதற்கான  முன்னெடுப்பை , கெ அடிலான் உயர்மட்ட தலைவர்கள்  கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் இன்று ஷா ஆலம்  மாலவத்தி ஸ்டேடியத்தில் ‘மலேசியா மடாணி', இலட்சியத்தை நடைமுறைப்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற பார்ட்டி கெ அடிலான் ராக்யாட்  சிறப்பு தேசிய காங்கிரஸ் 2023 இன் நிறைவு உரையில் சைபுதீன் நசுஷன்  கூறினார்.

உள்துறை அமைச்சராகவும் இருக்கும் சைஃபுதீன், ஆறு மாநிலங்களின் தேர்தல்களில், கெஅடிலான், டிஏபி, அமானா மற்றும் ஐக்கிய முற்போக்கு கினாபாலு அமைப்பு (உப்கோ) ஆகியவற்றைக் கொண்ட கூட்டணிக்கு வாக்காளர் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சியில் ஹராப்பானுக்கு ஒரு தீவிரமான அணுகுமுறை தேவை என்றார்.

விரைவில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திராங்கானு ஆகிய ஆறு மாநிலங்கள் தேர்தலில் ஈடுபடவுள்ளன.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.