கோலாலம்பூர், மார்ச் 8 - இந்தோனேசியாவின் தெற்கு மாலுகு கடலில் இன்றுஅதிகாலை 4.31 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.2 எனப் பதிவான மிதமான
நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் டோமோஹோன் நகருக்கு தெற்கே 179 கிலோமீட்டர் தொலைவில் 72 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தலை ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ANTARABANGSA
தென் மலுகு கடலில் மிதமான நிலநடுக்கம்- சுனாமி அபாயம் இல்லை
8 மார்ச் 2023, 3:16 AM


