2023 பட்ஜெட்- மித்ராவுக்கு வெ.10 கோடி, தெக்குன் திட்டத்திற்கு வெ.3 கோடி

24 பிப்ரவரி 2023, 2:57 PM
2023 பட்ஜெட்- மித்ராவுக்கு வெ.10 கோடி, தெக்குன் திட்டத்திற்கு வெ.3 கோடி

கோலாலம்பூர், பிப் 24- மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூகப் பொருளாதார உருமாற்றத் திட்டத்திற்கு 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரை இலக்காகக் கொண்ட தெக்குன் வர்த்தக கடனுதவித் திட்டத்திற்கு 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் முதன் முறையாக 5 கோடி வெள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை மனிதவள அமைச்சர் வீ.சிவக்குமார் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தப் பட்ஜெட் அனைத்து இன மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாகும் என அவர் வர்ணித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.