கோலாலம்பூர், பிப் 23- தஜிகிஸ்தான்-ஷின்ஜியாங் எல்லைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6.5 எனப் பதிவான வலுவான நிலநடுக்கம் இன்று காலை 8.37 மணியளவில் உலுக்கியது.
ஆப்கானிஸ்தானின் தாலோகான் பகுதின் வடகிழக்கே 363 கிலோ மீட்டர் தொலைவில் 49 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்குச் சுனாமி ஆபத்து ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்தது.


