அங்காரா, பிப் 22- தென் துருக்கியின் ஹடாய் மாநிலத்தில் திங்கள்கிழமை புதிதாகஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் இறந்துள்ள வேளையில் 294 பேர்
காயமடைந்தனர் என்று சின்ஹுவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி அதே பகுதியில் 41,000க்கும் அதிகமான மக்களைப் பலி கொண்ட
வலுவான நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ரிக்டர் அளவுகோலில் முறையே 6.4 மற்றும் 5.8 அளவுள்ள இரண்டு நிலநடுக்கங்கள் கடந்த திங்களன்று
ஏற்பட்டன.
முதல் நிலநடுக்கம் டெஃப்னே மாவட்டத்தை உள்ளூர் நேரப்படி இரவு 8:04 மணிக்கு
உலுக்கியது, அதைத் தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்குப் பிறகு சமந்தாக் மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை
ஆணையம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் புதிதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்வு
22 பிப்ரவரி 2023, 4:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




