ECONOMY

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின்  ஜூவாலான் ராயாட் , மலிவு விலை திட்டம் இந்தியர்கள் உட்பட அனைவருக்குமானது

21 பிப்ரவரி 2023, 10:51 AM
சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின்  ஜூவாலான் ராயாட் , மலிவு விலை திட்டம் இந்தியர்கள்  உட்பட  அனைவருக்குமானது
சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின்  ஜூவாலான் ராயாட் , மலிவு விலை திட்டம் இந்தியர்கள்  உட்பட  அனைவருக்குமானது

ஷா ஆலம் பிவ் 21 ;- சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன்  ஜூவாலான் ராயாட்  என்னும் , மலிவு விலை திட்டம்,  ஏன் இந்தியர்களுக்கு நடத்தப் பட வில்லை என்ற கேள்வியை ஒரு இணையதள ஏடு எழுப்பியுள்ளது. இது  இந்தியர்களை ஓரம் கட்டும் செயல் என்றும்  அது விரைவில்  எதிர்பார்க்கப்படும்  மாநிலத் தேர்தலில்   இந்தியர்களின் வாக்குகளை  இழக்க வழி அமைத்து விடும் எனவும்  அந்த ஏடு எச்சரித்துள்ளது.

ஆனால் ,  இந்தியர்களுக்கு  ஒரு திட்டம், சீனர்களுக்கு  ஒன்று  அல்லது  மலாய்க்காரர்களுக்கு ஒன்று என  நடத்தப் படுவதில்லை எனச்  சிலாங்கூர்இன்று   கூறுகிறது.  இந்த  விற்பனைகள்  குறித்துச் செய்திகள்  வெளியிட்ட வேளையில், பல இடங்களில்  இந்த  விற்பனைக்கு  வரும் பொது மக்களிடம் குறிப்பாக  இந்தியர்களிடம் , இவ்விற்பனை குறித்துப்  பேட்டியும் எடுத்துள்ளது.

அதற்கு, அவர்கள் கூறும்  காரணம் , ஒரு பொருளை  வாங்கக் கூட  வரிசை பிடித்து  நீண்ட நேரம்  காத்திருக்க வேண்டும்  என்பதுடன்,  இதற்கு  அதிகாலையிலேயே  எழுந்து காத்திருக்க  வேண்டும் என்பதே?  இது  காலையில்  வேலைக்குச்  செல்லும்  குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்கின்றனர் சிலர்.

 இத்திட்டம்  நடைபெறும்  இடம் மக்கள் ஒன்று கூட வசதியாக உள்ள இடங்களாக மேலும்  வாகன நிறுத்துமிட வசதி போன்ற  பொது மக்களின்  வசதிகள் மற்றும்  மக்களின் ஆதரவு ஆகியவையே கருத்தில்  கொள்ளப் படுகிறது..

பல இன மக்கள்  ஒன்று கூடும்  இடங்களில் இந்த மலிவு விலை  விற்பனை, ஏற்பாடு  செய்து, விற்கப் படாமல்  பொருட்களை  திரும்ப எடுத்துச் செல்லும் நிலையும், விரல் விட்டு எண்ணக்கூடிய  எண்ணிக்கையிலான  இந்தியர்களும் , சீனர்களும்  கலந்து கொண்ட  இடங்களை கைவிட வேண்டிய சூழல் சிலாங்கூர் விவசாய இலாக்கா அதிகாரிகளுக்கு ஏற்பட்டதைச்  சிலாங்கூர்  இன்று  கண்டுள்ளது.

அதனால் , பாலாய் ராயா,  சட்டமன்ற உறுப்பினர்கள்  அலுவலகம், மசூதி அல்லது சுராவ்  போன்ற , போக்குவரத்துக்கும்  ஒரு இடத்தில்  வியாபாரம் செய்யும் மற்ற வியாபாரிகளுக்கும்  அசௌகரியத்தை ஏற்படுத்தாத  இடங்களைத்  தேர்ந்தெடுத்து  செயல் படுத்தப்படுகிறது

இத்திட்டத்தில்  கொண்டுவரப்படும் சில பொருட்களை  குறிப்பாக  கோழி , இறைச்சி போன்றவைகள்  அன்றே விற்று தீர்த்துவிட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆகவே, அதிக மக்கள் ஒன்று கூடாத இடங்களை தவிர்த்து,  மக்கள் அதிக ஆர்வத்துடன் பங்கெடுக்க காலையிலேயே வரிசை பிடித்து நின்று பொருட்கள் வாங்கும்  இடங்களை தேர்ந்தெடுப்பது, வியாபாரத்தில், இயற்கையானதே.

இந்த திட்டங்கள் எங்கு  எப்பொழுது  நடைபெறுகிறது  என்பதை சில  சட்டமன்ற உறுப்பினர்களின்  அலுவலகங்கள்  இரண்டு தினங்களுக்கு முன்பே  வாட்ஸ் ஆப் செயலி , முக நூல்  (பேஸ்புக் ) வழி  தெரிவிக்கின்றனர். அப்படி ஒரு  செய்தியை  கடந்த சனிக்கிழமை  ஸ்ரீ செர்டாங்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர் சித்தி மரியா வெளியிட்டிருந்தார்.

அதே போன்று  கோத்தா கெமுனிங் , செந்தோசா, மேரு, பண்டமாறான், ரவாங் , கோம்பாக், புக்கிட் காசிங்  போன்ற  பல சட்டமன்ற  உறுப்பினர்கள்,  இந்த  விற்பனைத் திட்டம் குறித்து செய்திகள்  வெளியிட்டு  மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்திய துண்டு,   மக்கள் வரவேற்பைக் கண்டு தாமான் மேடானில் இரண்டு நாட்கள்  அடுத்தடுத்து நடத்தப் பட்டதும் உண்டு என்பதை சிலாங்கூர் இன்று  அறியும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.