கோலாலம்பூர், பிப் 21- துருக்கியில் இன்று அதிகாலை 1.04 மணி அளவில் 6.3 ரிக்டர் அளவில் எனப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கியின் அடானாவில் இருந்து 114 கிலோ மீட்டர் தென்கிழக்கில் 58 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 1.35 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது . இருப்பினும், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தலைக் கொண்டு வரவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


