துருக்கி, பிப் 19: காசியான்தெபிலிருந்து சுமார் 152 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் உள்ள செலிகான், அடிதாமானில் இயங்கும் மேடன் மலேசியா (HMM) மருத்துவமனை, பிப்ரவரி 14 அன்று திறக்கப் பட்டதிலிருந்து 164 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளது.
ஓப் ஸ்டார்லைட் 2 இன் காமண்டர், பிரிக் ஜெனரல் டத்தோ டாக்டர் அம்ரான் அமீர் ஹம்சா கூறுகையில், இரவில் -10 டிகிரி செல்சியஸ் கடுங்குளிர் மலேசிய ஆயுதப் படைகளுக்குச் சவாலாக அமைந்தது.
இருப்பினும், பிப்ரவரி 6 அன்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கான தனது உறுப்பினர்களின் உந்துதலை இது பாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.
மேடன் மலேசியா (HMM) மருத்துவமனைக்கு ஆண்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
"துருக்கி அரசாங்கம், உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் இங்கு வசிப்பவர்கள் நன்றாக ஒத்துழைப்பு வழங்குகின்றனர்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
106 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆறு வாரங்களுக்கு செலிகானில் செயல்படுவதே மேடன் மலேசியா (HMM) மருத்துவமனை திட்டத்தின் ஆரம்ப திட்டமிடல் என்று டாக்டர் அம்ரன் கூறினார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மலேசியாவிடம் துருக்கி அரசாங்கம் உதவி கோரியதை அடுத்து ஓப் ஸ்டார்லைட் 2 செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா


