இஸ்தான்புல், பிப் 19: துருக்கியில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் 296 மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு குழந்தை உட்பட மூன்று பேரை மீட்புக் குழுக்கள் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடித்ததாக ஜெர்மன் பத்திரிகை நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை. மேலும் ஹதாய், அன்தாக்யா மாவட்டத்தின் மீட்பு நடவடிக்கை பற்றிய அறிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.
தென்கிழக்கு துருக்கி முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக பேரிடர் ஆணையமான ``AFAD`` வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை வரை 39,672 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா


