அடியமான்/அடானா (துருக்கி), பிப் 18- அண்மையில் துருக்கியை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்திற்குப் பின்னர் பல கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் நடத்துநர்களை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான அனுமதியை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியது.
அந்த பேரிடரின் போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து எழுவர் பலியானச் சம்பவம் தொடர்பில் குத்தகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறியது.
அந்த கட்டிடத்தின் துணைக் குத்தகையாளர் ஒருவரும் விசாரணைக்கான கைது செய்யப்பட்டதாக அனாடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
துருக்கி வட சைப்ரஸ் கைப்பந்து குழுவின் உறுப்பினர்கள் உள்பட பலர் உயிரிழந்தது தொடர்பில் ஹோட்டல் ஒன்றின் மூன்று நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தென் அடனா பகுதியில் கட்டிடத்தை முறையாக கட்டத் தவறியதற்காக ஒரு நபருக்கு தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 6ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த அந்த நிலநடுக்கத்தில் இதுவரை 39,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கோடியே 30 லட்சம் பேர் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.


