ECONOMY

உயர்கல்விக் கூடங்களில் நுழையும் மாணவர்கள் வெ.1,000 வெகுமதிக்கு மார்ச் முதல் விண்ணப்பிக்கலாம்

17 பிப்ரவரி 2023, 7:46 AM
உயர்கல்விக் கூடங்களில் நுழையும் மாணவர்கள் வெ.1,000 வெகுமதிக்கு மார்ச் முதல் விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், பிப் 17- மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அரசின் உயர்கல்விக் கூட வெகுமதித் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளியைப் பெறுவதற்கு வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் முழு நேரமாக இளங்கலை, டிப்ளோமா மற்றும் நான்காம் நிலை திறன் சான்றிதழ் படிப்பை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த வெகுமதி திட்டத்திற்கு விண்ணப்பிலாம் என்று பாண்டான் இண்டா தொகுதி சமூக சேவை மையம் கூறியது.

விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் 11 ஆண்டுகளுக்கும் குறையாமல் சிலாங்கூரில் வசிப்பவர்களாகவும் சிலாங்கூரில் கல்வி பயின்றவர்களாகவும்  இருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனையாகும்.

மேலும் இந்த வெகுதிக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் முதலாம் தவணையில் சேர்வதற்கு உயர்கல்விக் கூடங்களில் இடம் வழங்கப்பட்டு அத்தவணையில் கல்வியைத் தொடர்வதற்கு பதிவு செய்தவர்களாக இருத்தல் அவசியம்

இந்த உயர்கல்வி வெகுமதிக்கான விண்ணப்பங்களை  http://hpipt.selangor.gov.my  அல்லது  hpipt@selangor.gov.my   என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம்.

மேல் விபரங்களை  03-5521 2469, 03-5544 7385 மற்றும் 03-55212306   எண்கள் வாயிலாகவும்  03-5510 4095 மற்றும்  03-5511 0659. தொலைநகல் வாயிலாகவும் பெறலாம்.

உயர் கல்வியைத் தொடரும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்விக்கூட மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு இந்த நிதி த் திட்டத்தை கடந்த 2008ஆம் ஆண்டில் தொடக்கியது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.