ஷா ஆலம், பிப் 17- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) ஏற்பாட்டிலான நடமாடும் முகப்பிட சேவை இங்குள்ள செக்சன் 13, ஏயோன் மால் கார் நிறுத்துமிடத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.‘ஷா ஆலம் ஒன் வீல்ஸ்‘ எனப்படும் இந்த சேவை காலை 11.00 மணி
முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட பணிகளை அலுவலகத்திற்கு வராமல் வார இறுதி நாட்களில் கவனிப்பதற்கு ஏதுவாக இந்த நடமாடும் முகப்பிடச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மதிப்பீட்டு வரியைச் சரி பார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட
அபராதங்களை செலுத்துவது, புகார்களை தெரிவிப்பது மற்றும்
லைசென்ஸ் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்வது உள்ளிட்ட
பணிகளை இந்த நடமாடும் முகப்பிடத்தில் பெறலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பணிகளை பொது மக்கள் எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக இத்தகைய நடமாடும் முகப்பிடச் சேவைகளை மாநகர் மன்றம் இதற்கு முன்னர் பல இடங்களில் நடத்தியுள்ளது.
ECONOMY
ஷா ஆலம் செக்சன் 13, ஏயோன் மாலில் நாளை எம்.பி.எஸ்.ஏ.வின் நடமாடும் முகப்பிடச் சேவை
17 பிப்ரவரி 2023, 6:37 AM


