அங்காரா, பிப் 16: நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 30,000 குடியிருப்பு கட்டிடங்களை அதிகாரிகள் மார்ச் மாதத்தில் கட்டத் தொடங்குவார்கள் என்று துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
“சேத மதிப்பீடு முடிந்தவுடன் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்குவோம். மார்ச் தொடக்கத்தில் இருந்து 30,000 குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கப்படும்.
"இப்பகுதியில் உள்ள வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பல உயர்தர மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களை ஓராண்டுக்குள் கட்டி முடிப்பதே எங்கள் குறிக்கோள்" என்று அவர் கூறினார்.
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் 98 சதவீதம் 1999-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது என்று எர்டோகன் கூறியுள்ளார்.
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,000ஐ தாண்டியுள்ளது. இந்த பேரழிவு வரலாற்றில் மிக மோசமான பேரிடர் என்று வர்ணிக்கப்படுகிறது.
- பெர்னாமா


