ஜக்கார்த்தா, பிப் 15: கடந்த வார தொடக்கத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல பகுதிகளில் சிக்கியிருந்த 120 இந்தோனேசியர்கள், இரண்டு மலேசியர்கள் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவரையும் இந்தோனேசியா அந்நாட்டியிலிருந்து வெளியே கொண்டு வந்தது.
இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, அதன் குடிமக்களில் மேலும் ஐந்து பேரையும் மூன்று பிலிப்பைன்ஸ் குடிமக்களையும் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகள் அங்காராவில் உள்ள குடியரசின் தூதரகத்தின் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியர்கள் 500 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று வெளியுறவு அமைச்சர் ரெத்னோ மர்சுடி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
திங்கட்கிழமை நிலவரப்படி, பலத்த காயமடைந்த 10 இந்தோனேசியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த இருவர் (ஒரு தாய் மற்றும் குழந்தை), கஹ்ரமன்மாராஸ் நகரில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
65 உறுப்பினர்களைக் கொண்ட இந்தோனேசியாவின் நடுத்தர நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு (முசார்) குழு தற்போது ஹட்யாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களைத் தேடி வருகிறது.
இந்தோனேசிய அரசாங்கம் எதிர்வரும் சனிக்கிழமையன்று துருக்கி மற்றும் சிரியாவிற்கு 80 டன் மனிதாபிமான உதவிகள் அதாவது உணவு, போர்வைகள், உடைகள் மற்றும் கூடாரங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது என்று ரெட்னோ கூறினார்.
– பெர்னாமா


