ECONOMY

200 வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் இலவச டெலிவரி சேவை - செல்டெக்

7 பிப்ரவரி 2023, 6:10 AM
200 வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் இலவச டெலிவரி சேவை - செல்டெக்

ஷா ஆலம், பிப் 7: இந்த மாதம் முழுவதும் செல்டெக் (Seldec) செயலி மூலம் பொருட்களை வாங்கும் போது தள்ளுபடிகள் மற்றும் இலவச டெலிவரியை அனுபவிக்கும் வாய்ப்பு மக்களுக்கு உள்ளது.

``FEB5`` என்ற குறியீட்டை உள்ளிடுவதன் மூலம், முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு RM5 தள்ளுபடி கிடைக்கும். மேலும், RM70 மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்கள் இலவச டெலிவரி பெறத் தகுதியுடையவர்கள் என்று முகநூல் வழியாக செல்டெக் தெரிவித்தது.

"முதலில் பொருட்கள் வாங்கும் 200 பேருக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும். அதனால், இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்" என்று செல்டெக் கேட்டு கொண்டது.

இந்நிறுவனம் 3 அக்டோபர் 2019 அன்று மாநில அரசால் தொடங்கப்பட்டது. செல்டெக் வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் நேரடியாக https://marketplace.seldec.my/ என்ற அகப்பக்கத்தின் மூலம் இணைக்கிறது.

அடிப்படை பொருட்கள், உடைகள், தனிப்பட்ட பராமரிப்புக் கருவிகள், புத்தகங்கள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் போன்றவை செல்டெகில் கிடைக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.