ALAM SEKITAR & CUACA

 தாமான் கசாசோவில் உள்ள வாகனப் பட்டறைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது - உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

3 பிப்ரவரி 2023, 4:03 PM
 தாமான் கசாசோவில் உள்ள வாகனப் பட்டறைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது - உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், பிப் 3: உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிஹெச்எஸ்) சுங்கை புவாயா, தாமான் கசாசோவில் உள்ள வாகனப் பட்டறைக்கு நோட்டீஸ் வழங்கியது. அவ்வாகனப் பட்டறை மாசுபாட்டை ஏற்படுத்துவதாக சந்தேகப்பட்டு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி நடந்த சோதனையின் போது, ​​ஆற்றின் கரையில் இருந்து சுமார் ஐந்து மீட்டர் தூரத்தில் பீப்பாய் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஹைட்ராலிக் எண்ணெய் கழிவுகள் கசிந்ததற்கான தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக உலு சிலாங்கூர் நகராண்மை கழகம்  அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட ஹைட்ராலிக் எண்ணெய் நிரப்பப்பட்ட ஏழு பீப்பாய்கள் அங்கிருந்தன. அவை சரியான முறையில் நிர்வகிக்கப்பட வில்லை. அதனால், கனமழை பெய்தால் எண்ணெய் கசிந்து ஆற்றின் பகுதிக்குள் நுழையும் என்று அஞ்சப்படுகிறது.

"எனினும், இவ்விடத்தில் வாகனச் சேவை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, அதற்கு பதிலாகப் பேருந்து நிறுத்தும் இடமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது" என்று அந்த வளாகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதே அறிக்கையின் மூலம், உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் இன்னும் பல குற்ற அறிவிப்புகளை அந்த வளாகத்திற்கு எதிராக வெளியிட்டது, இதில் உள்ளாட்சி சட்டம் 1976 (சட்டம் 171) பிரிவு 69இன் கீழ் ஆற்றின் கரையில் இடையூறு ஏற்படுத்தியதும் அடங்கும்.

எனவே, திட்டமிடப்பட்ட கழிவுகளை மூடிய இடத்தில் சேமித்து, எண்ணெய் கலந்த மண்ணை சுத்தம் செய்து, ஆற்றங்கரையில் உள்ள கழிவுநீர் தொட்டியை மூன்று நாட்களுக்குள் அகற்றுமாறு உரிமையாளர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

“இதற்கிடையில், அரசு நிலத்தில் அனுமதியின்றி பேருந்து நிறுத்தும் இடமாக பயன்படுத்தியதற்காக உரிமையாளருக்கு பிரிவு 26 (1) (ஏ) எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அனுமதியின்றி கட்டிட கட்டமைப்புகளை நிர்மாணித்ததைத் தொடர்ந்து பிரிவு 70 (13)(c) இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டது, மேலும் கட்டிடத் திட்டத்தை 14 நாட்களுக்குள் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.