MEDIA STATEMENT

 தேசியக் கல்விக் ஆலோசனைக் குழுவில் தமிழர், மகிழ்ச்சியான செய்தி விரைவில்!

25 ஜனவரி 2023, 2:22 PM
 தேசியக் கல்விக் ஆலோசனைக் குழுவில் தமிழர், மகிழ்ச்சியான செய்தி விரைவில்!

புத்ராஜெயா, ஜன 25 ;-  கடந்த வாரம் மனிதவள அமைச்சர் வீ.சிவக்குமார் அறிவித்தபடி  இன்று காலை கல்வி அமைச்சர் பட்லினா சீடேக்கை  அவர் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது  ஒரு தமிழரும்  தேசியக் கல்விக் ஆலோசனைக் குழுவில் இடம் பெற வேண்டும் என்ற தமிழ் சமுதாயத்தின்  கோரிக்கையையும், தமிழ்ப்பள்ளிகள் மீதான  மலேசியத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை தான் கல்வி  அமைச்சரின் கவனத்திற்கு  கொண்டு வந்ததாக கூறினார்.

இது மொழி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தமிழர்கள்  உணர்ச்சியை கல்வி அமைச்சர்  புரிந்து கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்த  அவர். இதனுடன்  இந்த விவகாரம் முடிவுக்கு  வந்துள்ளது, இவ்விவகாரம் குறித்து ஒரு மகிழ்ச்சியான தகவலை கல்வி அமைச்சர் வெகு விரைவில்  வழங்குவார்   என்றார். அவர்.

இவ்வேளையில் இந்த விவகாரம் மீது  பொறுமை காத்து ஆலோசனைகள் வழங்கியவர்கள் மற்றும் தங்கள்  ஆதங்கங்களையும், கண்டனங்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்த அனைத்து தரப்பினர் களுக்கும்  தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் மனிதவள அமைச்சர் வீ.சிவக்குமார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.