ALAM SEKITAR & CUACA

சீனப் புத்தாண்டை முன்னிட்டு 10 யூனிட் ரோல் ஆன் ரோல் ஆஃப் தொட்டிகள் வழங்கப்படுகின்றன - செலாயாங் முனிசிபல் கவுன்சில்

13 ஜனவரி 2023, 11:49 AM
சீனப் புத்தாண்டை முன்னிட்டு 10 யூனிட் ரோல் ஆன் ரோல் ஆஃப் தொட்டிகள் வழங்கப்படுகின்றன - செலாயாங் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், ஜன. 13: சீனப் புத்தாண்டை முன்னிட்டு மொத்தக் குப்பைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் மின்-கழிவுகள் பொதுமக்கள் அகற்றுவதற்கு வசதியாக செலாயாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்) 10 யூனிட் ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டிகளை வழங்குகிறது.

KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) உடன் இணைந்து 'ஸ்பிரிங் கிளீனிங்'  திட்டத்திற்கு இன்று தொடங்கி ஜனவரி 15 வரை 10 இடங்களில் ரோரோ தொட்டிகள் வைக்கப்படுகின்றன என்று அதன் கார்ப்பரேட் துறையின் மக்கள் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

"இந்த திட்டம் மக்கள் மொத்தக் குப்பைகளை அகற்ற உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் ரோரோ தொட்டிகளை மொத்த கழிவுகளை அகற்றுவதற்காக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எம் பி எஸ் நம்புகிறது. இதனால் சுற்றியுள்ள பகுதி சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்," என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு பொதுமக்கள் திடக்கழிவு மற்றும் சுகாதார மேலாண்மை துறையை (JPSPK) 03-6126 6024 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.mps.gov.my ஐப் பார்வையிடவும்.

RORO தொட்டிகள் வைக்கும் இடங்கள் பின்வருமாறு:

ஜாலான் SG3/6 & SG3/7 (ஸ்ரீ கோம்பாக் சந்தைக்கு அருகில்)

ஸ்ரீ செலாயாங் பூங்கா

ஜாலான் SJ 24 தாமான் செலாயாங் ஜயா

தாமான் டயா

கம்போங் லீ கிம் சாய்

ஜாலான் NGP1 நியு கிரின் பார்க் ரவாங்

பண்டார் கண்ரி ஹோம்ஸ்

ஜாலான் பிஆர்பி 7/1 புக்கிட் ரஹ்மான் புத்ரா

கம்போங் டேசா அமான்

டேசா ஜெயா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.