ALAM SEKITAR & CUACA

தளவாடங்கள், தோட்டத்து கழிவுகளை அகற்ற ரோரே குப்பைத் தொட்டி சேவை- எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

12 ஜனவரி 2023, 7:32 AM
தளவாடங்கள், தோட்டத்து கழிவுகளை அகற்ற ரோரே குப்பைத் தொட்டி சேவை- எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 12- ஷா ஆலம் வட்டார மக்களின் வசதிக்காக ரோரோ எனப்படும் நடமாடும் குப்பைத் தோம்பு வாடகை சேவையை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்குகிறது.

தோட்டத்து கழிவுகள், விவசாயப் பொருள்கள் மற்றும் தளவாடங்களை அதற்றுவதற்கு ஏதுவாக 3 டன் எடையுள்ள இந்த தோம்புகள் வழங்கப்படுகின்றன என்று மாநகர் மன்றம் தெரிவித்தது.

தரை வீட்டு குடியிருப்பாளர்களுக்கு 100 வெள்ளி வாடகையிலும் அடுக்குமாடி அல்லது ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 250 வெள்ளிக்கும் வர்த்தக மையங்களில் 150 வெள்ளிக்கும் இந்த குப்பைத் தோம்புகள் வாடகைக்கு விடப்படும் என தனது பேஸ்புக் பதிவில் நகராண்மைக் கழகம்  கூறியது.

இந்த குப்பைத் தோம்புகளின் சேவையைப் பெற விரும்புவோர் ஷா ஆலம் மாநகர் மன்ற தலைமையகத்தின் திடக்கழிவு மற்றும் துப்புரவு மேலாண்மைத் துறையை தொடர்பு கொள்ளலாம்.

இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-55105133 இணைப்பு 1645/1547/1316/1695/1239 என்ற எண்களில் அல்லது  என்ற மின்ஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.