HEALTH

பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு (OKU) ஏற்றவாறு மருந்து லேபிள் தயாரிக்கும் முயற்சி - சுகாதார அமைச்சு

6 ஜனவரி 2023, 9:31 AM
பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு (OKU) ஏற்றவாறு மருந்து லேபிள் தயாரிக்கும் முயற்சி - சுகாதார அமைச்சு

புத்ராஜெயா, ஜன 6: சுகாதார அமைச்சு (MOH) பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு (OKU) ஏற்றவாறு மருந்து லேபிள் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது சுகாதார நிலையங்களில் இருந்து பார்வை குறைபாடுள்ளவர்கள் மருந்து பெற்று கொள்ள உதவியாக இருக்கும்.

பார்வையற்றோர் மருந்துகள் மற்றும் மருந்துச்சீட்டுகள் பற்றிய தகவல்களை விரைவாகவும் துல்லியமாகவும் பெறுவதை எளிதாக்கும் வகையில் இந்த லேபிள் உருவாக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

``பார்வை குறைபாடுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து லேபிளில் மருந்துகளை உட்கொள்ளும் முறையைப் பற்றி விளக்க பிரெய்லி எழுத்து இருக்கும்``.

"காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்ற மருந்துகளின் பயன்பாட்டை விளக்கும் அறிகுறிகளும் லேபிளில் உள்ளன," என்று அவர்

நாடு முழுவதும் உள்ள 250 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 55,000 பார்வையற்றோர் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஆசியாவிலேயே இந்த திட்டத்தைச் சீக்கிரமாகச் செயல்படுத்திய நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும், இது பார்வையற்றவர்கள் பாதுகாப்பாக மருந்து உட்கொள்ள துல்லியமான தகவல்களைப் பெறவதற்கு உதவுகிறது. இத்திட்டம் பார்வையற்றவர்களின் மீது அரசாங்கத்திற்கு உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது.

இம்முயற்சியைச் செயல்படுத்துவதன் மூலம், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2008 ஆகியவற்றின் கீழ் சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயரை மேம்படுத்த முடியும், என்றார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.