ECONOMY

சீனப் புத்தாண்டை முன்னிட்டு குப்பை சேகரிக்கும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - சுபாங் ஜெயா நகரக் கவுன்சில்

6 ஜனவரி 2023, 3:42 AM
சீனப் புத்தாண்டை முன்னிட்டு குப்பை சேகரிக்கும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - சுபாங் ஜெயா நகரக் கவுன்சில்

சுபாங் ஜெயா, ஜன 6: சுபாங் ஜெயா நகரக் கவுன்சில் (MBSJ) சீனப் புத்தாண்டை முன்னிட்டு குப்பைகளைச் சேகரிக்கும் சேவையைக் குடியிருப்பாளர்களுக்கு வழங்குகிறது.

குடியிருப்பு பகுதிக்கான மொத்த குப்பை சேகரிப்பு சேவை KDEB கழிவு மேலாண்மையால் ஜனவரி 7 முதல் 21 வரை 15 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும்.

சுபாங் ஜெயா நகரக் கவுன்சில் கீழ் இயங்கும் அனைத்து நிர்வாகப் பகுதிகளும் இச்சேவையின் வழி மெத்தைகள் மற்றும் பழைய தளவாடப் பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த முடியும் என டத்தோ பண்டார் சுபாங் ஜெயா டத்தோ ஜொஹாரி அனுவார் தெரிவித்தார்.

"ஆனால், மறுவடிவமைப்பு செய்யக்கூடிய பொருட்கள், மின்சார பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை இச்சேவையின் வழி அப்புறப்படுத்த இயலாது.

"சீனப் புத்தாண்டை கொண்டாடும் எம்பிஎஸ்ஜே நிர்வாகப் பகுதியின் கீழ் வசிப்பவர்களுக்கு இச்சேவையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது," என்றார்.

மொத்த குப்பை சேகரிப்பு சேவைக்கு KDEBWMஐ 03-80814437 என்ற எண்ணில் அல்லது 011-35584437 என்ற வாட்ஸ்அப் செயலிலோ இன்று முதல் ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்.

குப்பைகளைச் சேகரிக்கும் தேதியை நிர்ணயிக்க விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் குடியிருப்பாளர்கள் மொத்த குப்பைகளை வீட்டின் முன் வைக்க வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.